Sunday, 1 May 2016

In Life

This kavithai, I penned down is about "In Life"

நெடுநாள் பயணம் குறையாத வேகம்,

நிற்காத நேரம் அறியாத வாழ்க்கை,

காலத்தின் மாற்றம் தீராத ஆசை,

பரந்த வானம் ஆழ் அறியாத பூமி,

சுட்டெரிக்கும் சூரியன் இடைவிடாத மழை,

போகாத இடம் போகும் மனம்,

பார்க்கின்ற உடல் பார்க்காத உள்ளம்,

நீண்ட பார்வை தெரியாத பாதை,

விரைகின்ற காலம் நிறையாத தனம்,

பொலிவில்லாத வாழ்க்கை தேடுகின்ற பதில்கள்.



Dated: 22-11-2014 5:00pm